Tamil Rasi Palan Yearly

2024 Tamil Rasi Palan Yearly
2024 தமிழ் ஆண்டு ராசி பலன்கள்
ஆங்கில புத்தாண்டு பலன்கள் - (2024)

2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மதங்களுக்குரிய தலைப்பில் மேஷ ராசியினர் முதல் மீனராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புது வருடம் 2024 - நிகழும் சோபகிருது வருடம், மார்கழி மாதம் 16-ம் நாள் திங்கள்கிழமை அன்று தேய்பிறை பஞ்சமி திதியில், கீழ்நோக்குடைய மகம் நட்சத்திரம், (கன்னி லக்னத்தில்) - சந்திரன் - சிம்ம ராசியில், சூரியன் - தனுசு ராசியில், புதன் - விருச்சிக ராசியில் , சுக்கிரன் - விருச்சிக ராசியில், செவ்வாய் - தனுசு ராசியில், ராகு - மீன ராசியில், கேது, மீன ராசியில் இவ்வருடம் பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முக்கிய கிரகங்களான குரு பகவான் மேஷ ராசியிலும், சனி பகவான் கும்ப ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். குரு மற்றும் சனி கிரகத்தினை கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2024 எழுதப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிக்கான பலனில் இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது வான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தியை பொறுத்து நன்மை, தீமையான பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்.
இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் கவலைப்பட தேவையில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் ஒரு சிலருக்கு ஜாதக ரீதியாக யோக திசை நடக்குமானால் வரும் கெடு பலன்கள் குறைந்து பல நல்ல பலன்கள் கட்டாயம் நடக்கும். அதுமட்டுமில்லாமல் கோட்சரத்தில் குரு மற்றும் சனிபகவான் நல்லமுறையில் சஞ்சாரம் செய்து தசா புத்தியும் நல்ல முறையில் நடந்தால் பல யோகமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஜோதிட அன்பர்கள் அனைவரும் அவரவர் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், கிராம தெய்வத்தையும், மற்றும் மகான்களையும் முறையாக வணங்கி அருளை பெறுமாறு எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology) செல் : 9003019831

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.